அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
முதல் முறையாக வெளியான விராட்கோலியின் மகள் புகைப்படம்.. அப்போ அது இல்லையா..?
விராட்கோலி அனுஸ்கா ஷர்மா ஷர்மா குழந்தையின் முதல் புகைப்படம் என வெளியான புகைப்படம் உண்மை இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியும், பிரபல பாலிவுட் நடிகை அனுஸ்கா ஷர்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டநிலையில் தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த தகவலை விராட்கோலி நேற்று தனது சமூக வலைதள பக்கம் மூலம் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை விராட்கோலிக்கும், அனுஸ்கா ஷர்மாவுக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர். இந்நிலையில் விராட் கோலியின் சகோதரரான விகாஸ் கோலி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை ஒன்றின் காலின் புகைப்படங்களை பதிவிட்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த பதிவு மற்றும் அதில் இருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள், இதுதான் விராட்கோலி மகளின் முதல் புகைப்படம் என செய்தி வெளியிட்டது. இந்த தகவல் வைரலானதை அடுத்து, இது விராட்கோலியின் மகளின் புகைப்படம் அல்ல எனவும், அவர்களை வாழ்த்துவதற்காக ராண்டமாக தேர்வு செய்த ஒரு புகைப்பட்டதாம் அது என தற்போது அவர் விளக்கம்கொடுத்துள்ளார்.