அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத வாய்ப்பு உள்ளதா! புள்ளிப்பட்டியல் கூறுவது என்ன?



Will india face australia in semifinal

10 நாடுகள் கலந்து கொண்டுள்ள உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மட்டும் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. இந்த இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோத வாய்ப்பு உள்ளதா என்பதை பார்ப்போம்.

இதுவரை அனைத்து அணிகளும் 8 தலா 8 போட்டிகளில் ஆடி முடித்துவிட்டன. அனைத்து அணிகளுக்குமே இன்னும் தலா ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அந்த ஒரு போட்டி தான் புள்ளிப்பட்டியலில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த போகிறது.

wc2019

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை பொறுத்தவரை 14 மற்றும் 13 புள்ளிகள் முறையே முதல் இரண்டு இடங்களை தற்போது பிடித்துள்ளன. ஆனால் இரு அணிகளுக்கும் உள்ள கடைசி ஆட்டம் இந்த வரிசையில் மாற்றத்தை நிகழ்த்த வாயப்புள்ளது. ஆனால் இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி தான் நிச்சயம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

wc2019

இந்த இரண்டு அணிகளுமே கடைசி போட்டியில் வென்றால் ஆஸ்திரேலியா முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும்  தான் பிடிக்கும். எனவே இந்த இரண்டு அணிகளும் அரையிறுதியில் மோத வாய்ப்பு இல்லை. ஒருவேளை ஒரு அணி தோற்று ஒரு அணி வென்றாலும் இதே நிலை தான் நீடிக்கும்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் நியூசிலாந்து வென்று இந்தியா இலங்கையிடம் தோற்றால் நியூசிலாந்து இரண்டாம் இடத்தையும் இந்தியா மூன்றாம் இடத்தையும் பிடிக்கும். அப்போது இந்தியா-நியூசிலாந்து அணிகள் தான் அரையிறுதியில் மோதும்.

wc2019

எனவே எப்படி பார்த்தாலும் பலம் வாய்ந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதியில் மோத வாய்ப்பேயில்லை. இரு அணிகளும் அரையிறுதியில் வென்றால் இறுதிப் போட்டியில் தான் மோதும்.