மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது சிறுமியுடன் லாட்ஜில் தங்கியிருந்த இளைஞர்.. விசாரணையில் நடுங்கிப்போன அதிகாரிகள்.. நெஞ்சை பதறவைக்கும் உண்மை.!
இன்ஸ்டாகிராமில் 13 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞன், நயவஞ்சகமாக மகாபலிபுரத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறுவதற்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் வசித்து வரும் பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "எனக்கு 13 வயது மகள் இருக்கிறார். இவர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை காணவில்லை" என தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் செல்போன் நம்பரை வைத்து சோதனை செய்தனர்.
அப்போது, சிறுமியின் செல்போன் மகாபலிபுரத்தில் இருப்பதாக காண்பித்துள்ளது. இதனையடுத்து, அங்குள்ள விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தியபோது, விடுதி ஒன்றில் சிறுமியுடன் இருந்தவர் தப்பி செல்ல முயற்சித்தார். அவரை பிடித்து விசாரிக்கையில், அவர் செங்கல்பட்டில் வசித்து வரும் இளைஞர் என்பது அம்பலமானது.
இவர் சம்பந்தப்பட்ட 13 வயது சிறுமியுடன் ஓராண்டாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில், நாளடைவில் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறார். சம்பவத்தன்று சிறுமியை மகாபலிபுரம் செல்லலாம் என அழைத்து, விடுதியில் அறையெடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததும் உறுதியானது.
இதனையடுத்து, வழக்கை அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரிக்க ஒப்படைக்கப்படவே, அவர்கள் இளைஞரின் மீது போக்ஸோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். 13 வயதில் அறியா பருவத்தில் காதலில் விழுந்த சிறுமி, தனது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை சந்திக்கும் முன்பு காப்பாற்றப்பட்டுள்ளார்.
புரியாத வயதில் காதல் என்ற மாய வலையில் வீழ்ந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு ஓர் உதாரணமாக இந்த சம்பவமும் அமைந்துள்ளது.