திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
13 வயது மாணவியை சீரழித்த இன்ஸ்டாகிராம் நண்பர்கள்.!! போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது.!!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான 4 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகம்
திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றி பலரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள் இன்ஸ்ட்டா மூலமாக அறிமுகமாகி இருக்கின்றனர்.
கடத்திச் சென்று கற்பழிப்பு
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 14ஆம் தேதி மாணவி வீட்டில் இருந்து மாயமாகி இருக்கிறார். இந்நிலையில் பட்டணம் கிராமம் அருகே மாணவியை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக மாணவியிடம் கேட்டபோது தன்னுடைய சமூக வலைதள நண்பர்கள் தன்னை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!! 3 நாட்கள் கற்பழிப்பு, சாதி வன்கொடுமை.!!
போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அந்த மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிரகலாதன் (24), திருநாவுக்கரசு (20), முரளி (23) மற்றும் தனசேகர் (19) ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: ரௌடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம்; காவல் ஆணையர் அருண் மன்னிப்பு கோரினார்.!