#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி! முட் புதருக்குள் அரை நிர்வாணமாக கிடந்த இளம் பெண்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவம் சில நாட்களாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் மீண்டும் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு முட் புதரில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கும்பல் 200 க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் கொடுமை செய்தது, கோவையில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவமும் இப்படி நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்கள் மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில் இன்று இந்த கொடூர சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற பிரகதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரகதியின் பெற்றோர் இன்று காலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் பிரகதி காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் ரோட்டில் முட்புதருக்குள் பிரகதி அரைநிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ப்ரகதியின் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.