பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னையில் பட்ட பகலில் கஞ்சா விற்பனை.. 3 பேர் கைது.!
சென்னையில் வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அருகே குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களான சஞ்சீவ், சஞ்சய் ஆகிய மூன்று பேர் சேர்ந்து தனி வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.