மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கனமழை எதிரொலியாக நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!
தலைநகர் சென்னையை புரட்டி எடுத்த மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்து வருகிறது. இந்த புயலினால் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது சென்னையில் மழை ஓய்ந்துள்ள காரணத்தால் நகரில் தேங்கியுள்ள நீரானது மாநகர பணியாளர்கள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல மழையின் தாக்கம் குறைந்த போதிலும் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.