மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
27 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 16 வயது சிறுவன்: காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி..!
பாண்டிச்சேரி, வில்லியனூர் அருகேயுள்ள புதுக்குப்பம், நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் (27). இவர் பாண்டிச்சேரி நகர்புறத்தில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு இவர், வேலை நேரம் முடிந்த பின்பு பேருந்தில் நத்தமேடு நிறுத்தத்தில் வந்து இறங்கினார்.
பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென அவரை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது கூக்குரலை கேட்டு அந்த வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்கள் இளம்பெண்ணுக்கு உதவிக்கு வந்தனர்.
இதனையடுத்து மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் மங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் சம்பவம் நடந்த சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது மங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.