ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
பிளாஸ்டிக் பையினால் இறுக்கி 7 வயது மகன் கொடூரமாக கொலை.! கணவன் மற்றும் மனைவியும் தற்கொலை.!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மகனை கொலை செய்துவிட்டு தாய் மற்றும் தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் முகிலன் குடியிருப்பை சேர்ந்தவர் முரளிதரன்(40) சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் தனது மனைவி சைலஜா மற்றும் ஏழு வயது மகன் ஜீவா ஆகியோருடன் தக்கலை அருகே வசித்து வந்தார். பெங்களூருவில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் கொரோனா ஊரடங்கு காலத்தின் போதே வீட்டில் இருந்து பணியாற்றி வந்திருக்கிறார்
சைலஜாவின் தந்தை கோபாலன் இவர்கள் வீட்டிற்கு தினமும் பால் எடுத்து வந்திருக்கிறார். இதைப் போல சம்பவம் நடந்த தினத்தன்று பாலை எடுத்து வந்தவர் வீட்டின் கதவு திறக்கப்படாததால் வாசலில் வைத்து விட்டு சென்றிருக்கிறார். பின்னர் மாலை வந்து பார்த்தபோதும் பால் அதே இடத்திலிருந்து இருக்கிறது கதவும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனரின் துணையுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கடந்துள்ளனர். மேலும் குழந்தை ஜீவா முகத்தில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மெத்தையில் கிடந்திருக்கிறான்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கடிதம் கிடைத்திருக்கிறது. அந்த கடிதத்தில் மகனை கொலை செய்து விட்டு தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருக்கின்றனர். இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.