வரிச்சூர் செல்வதுடன் நடிகர் கூல் சுரேஷ் திடீர் சந்திப்பு.. நீர் தானம் செய்த வரிச்சூருக்கு பாராட்டு..!
மதுரைக்கு சென்றிருந்த நடிகர் கூல் சுரேஷ், வரிச்சியூர் செல்வதை நேரில் சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து, வீடியோ ஒன்றில் பேசுகையில், "நான் ஒவ்வொரு முறை மதுரைக்கு வரும்போதும் அண்ணன் என்னை சந்தோசப்படவைப்பார்.
உனக்கு ஏதும் தொந்தரவு என்றால் சொல்லு சரி செய்யலாம் என கூறுவார். அதற்கு காரணம் மதுரை மண். மதுரையில் உள்ள சொந்த பந்தங்களை விட்டு சொல்ல கூடாது என கூறுபவர் அண்ணன் தான். எனது ஸ்டைலில் கூறவேண்டும் என்றால், எஸ்.டி.ஆர்-ன் பத்து தல, வரிச்சூர் செல்வம் என்றால் கெத்து தல..
பொதுவாக ஒருசிலர் என்னுடன் படித்தவர், தொழில் துறையில் இருந்தவர் என அறிமுகம் செய்வார்கள். சார் மட்டும் என்னுடன் சிறையில் இருந்தவர் என அறிமுகம் செய்வார். வரிச்சூர் அண்ணனை சந்திப்பதில் நான் பெருமை கொள்கிறேன். மாஸாக, கெத்தாக இருக்க வேண்டும் என்பதை அண்ணனை பார்த்து கற்றுக்கொண்டேன்.
வெந்து தணிந்தது காடு., வரிச்சூர் செல்வத்திற்கு வணக்கத்தை போடு. வெயில் காலத்தில் அண்ணன் நீர் இலவசமாக கொடுக்கிறார். தானத்தில் சிறந்தது நீர் தானம் என்று கூறுவார்கள். மதுரையில் இருக்கும் பல மக்களுக்கு நீர் கொடுத்து உதவிய அண்ணனுக்கு நன்றி. மதுரை மண் சிறப்பு வாய்ந்த மண்" என்று பேசினார்.