மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செங்கலை தூக்கி காண்பித்த உதயநிதி எங்கே? - ஆர்.பி உதயகுமார் சரமாரி கேள்வி..!
எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டு செங்கலை உயர்த்தி கேட்டவரை ஒன்றரை ஆண்டுகளாக காணவில்லை என்று முன்னாள் அமைச்சர் பேசினார்.
மதுரையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் & தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் பேசுகையில், "எடப்பாடி பழனிச்சாமி எய்ம்ஸ் மருத்துவமனையாக நிலம் ஒதுக்கி தந்தார்.
அந்த இடத்தில் எப்போது மருத்துவமனை வரும் என்று செங்கலை உயர்த்தி தேர்தலுக்கு முன்பு காண்பித்தவர் எங்கு சென்றார்?. எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிலம் இங்கு இருக்கிறது. செங்கலை காண்பித்தவர் எங்கே? என்று தென்மாவட்ட மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
திமுக ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகாலம் ஆகியுள்ள நிலையில், செங்கலை காட்டியவரும், மக்களிடம் செங்கோலை பெற்றவரும் எய்ம்ஸ் செங்கல் குறித்து எதற்காக பேசாமல் இருக்கிறார்கள். அதற்காக வாயை திறக்க மறுப்பது எதனால்?" என்று தெரிவித்தார்.