#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னை மூலையில் ஒதுக்கி., நானும் - அமமுக தொண்டர்களும்... டி.டி.வி தினகரன் பரபரப்பு பேட்டி.!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "தேனி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் என்னை அதிமுகவில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறார்கள். அதிமுக என்ன முடிவு எடுக்கிறது என காணலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வரவே அமமுக முயற்சித்து வருகிறது.
அதிமுக என்ற கட்சியை கைப்பற்றுவது அமமுகவின் நோக்கம் கிடையாது. ஆதலால் சுயபரிசோதனை செய்யும் நிலையில் அதிமுக இயக்கம் தான் உள்ளது. அதிமுகவில் இருந்து தான் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரனை இணைக்க வேண்டும் என்ற குரல் வருகிறது. அதிமுக தலைமை தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கட்டும். நாங்கள் அமமுக தொண்டர்களுடன் ஆலோசனை செய்து முடிவுகளை எடுப்போம்.
கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றம், உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என தேர்தலில் அடைந்த தோல்விகள் கூட அவர்களை இவ்வாறு முடிவெடுக்க வைத்திருக்கலாம். அனைவரும் ஒன்றாக இருந்திருந்தால் திமுகவை நடப்பு சட்டப்பேரவை தேர்தலில் எதிர்த்து இருக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அதிமுக இயக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் என் நண்பர்கள் தான். நான் யாரையும், என்றைக்கும் எதிர்த்து இல்லை. என்னைத்தான் மூலையில் ஒதுக்கி எதிர்த்தார்கள்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் வேண்டும் என்றால் நாங்கள் தோல்வி அடைந்திருக்கலாம். நிச்சயம் வலுப்பெற்ற இயக்கமாக நாங்கள் உருவாகுவோம். மீண்டும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய இயக்கமாக உருவெடுப்போம். சரியான பாதைகள் இருப்பின், தொண்டர்களின் விருப்பத்தோடு பயணிப்போம்" என்று தெரிவித்தார்.