வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
அவங்க சொல்றதெல்லாம் பொய்.. தமிழகத்தில் நீட் தேர்வு நிச்சயம் நடக்கும்.! தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி.!
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வை பொருத்தவரை திமுக முழுவதும் நாடகமாடுகிறது. இதில் புதிதாக பேசுவதற்கு வேறு ஒன்றும் கிடையாது.
நீட் தேர்வு என்பது சமூகநீதி, ஏழை மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நன்மையை வழங்கக்கூடியது. கடந்த ஆறு மாத காலமாக திமுகவிடம் வெள்ளை அறிக்கை கேட்டுக் கொண்டிருக்கிறோம். வெள்ளை அறிக்கையும் கொடுக்காமல் ஒரு பொய்யைத் தொடர்ந்து கூறி வந்தால் அது உண்மையாகி விடாது.
திமுக அரசு நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்ற தொடர்ச்சியாக பொய்யை சொல்லி சொல்லி அது உண்மையாகி விடும் என்கின்ற நப்பாசையில் இருக்கிறார்கள். நீட் என்பது தமிழகத்தில் நிச்சயம் இருக்கும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என தெரிவித்தார்.