#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
யாரை பார்த்து என்ன கேள்வி கேக்குற, தமிழிசையிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ டிரைவர், வெளுத்து கட்டிய பாஜகவினர்.!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரிடம் பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுனரை பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோலின் விலை நாடெங்கும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
ஆனால் அப்பொழுது அதற்கு பதில் கூறாமல் தமிழிசை சிரித்து சமாளித்தார். ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்த பாஜகவினர் அந்த ஆட்டோ டிரைவரை, வயதானவர் என்றும் பாராமல் அடித்து இழுத்து சென்றனர். அவரின் கன்னத்தில் சிலர் அறைந்து,தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆட்டோ ஓட்டுனர், அதில் வண்டி வாடகை கொடுக்க கூட என்னிடம் பணம் இல்லை. பெட்ரோல் போடவே வருமானம் சரியாக உள்ளது. தினமும் பெட்ரோலுக்கே எல்லா பணமும் செலவாகிறது. இதில் எப்படி குடும்பத்திற்கு பணம் கொடுப்பது. வாடகை கொடுப்பது. அதுமட்டுமின்றி எப்படி சாப்பிடுவது.
அதனால் என் ஆதங்கத்தைதான் நான் சொன்னேன். அதற்கு போய் பாஜகவினர் என் கன்னத்தில் அறைந்தார்கள் என்று அந்த ஆட்டோ ஓட்டுநர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.