#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மழை வெள்ளத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எத்தனை? மத்திய அரசு அறிவிப்பு.!
நடப்பு 2021 ஆம் வருடத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றம் காரணமாக தமிழ்நாட்டில் 54 பேர் மரணித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெய்த மழை, வெள்ள பாதிப்பு குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருநாவுக்கரசர், உத்தம சிகாமணி, செல்வகுமார், விஜய் வசந்த், எஸ்.ஆர் பார்த்திபன், ஜி.செல்வம் உட்பட பலரும் கேள்விகள் எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், கடந்த நவ. 25 ஆம் தேதியின் நிலவரப்படி தமிழ்நாட்டில் 54 பேர் இயற்கை சீற்றத்திற்கு மரணமடைந்துள்ளார். 6871 கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
விவசாய நிலங்களை பொறுத்த வரையில் 0.51 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 11,636 வீடுகள் சேதமாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் 2001 பேர் உயிரிழந்துள்ளனர். 53,228 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. 7,08,058 வீடுகள் சேதமடைந்துள்ளன.