ரூ.5000க்கு ஆசைப்பட்டு பணம் இழந்த இளைஞர்; முதல்வர் போட்டோவுடன் வைரலாகும் பணம் பறிக்கும் லிங்க்.!



Chennai Adampakkam youth Loss Money cyber Crime 

 

ஆன்லைன் வழிக்குற்றங்கள் இன்றளவில் புதுபுதுப்பு முறையில் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க தனிமனித விழிப்புணர்வு என்பது அவசியம். ஆசையாக வலைவிரிக்கும் கும்பலின் பின்னணி தெரியாமல் செயல்பட்டால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத். சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பழக்கம் கொண்ட வினோத், சமீபத்தில் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். 

இதையும் படிங்க: ஆன்லைனில் புதுவகை மோசடி; பாசத்தை பணயமாக வைத்து இலட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. மக்களே உஷார்.!

மோசடி கும்பலை நம்பி ஏமாற வேண்டாம்

அந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க ஸ்டாலினின் புகைப்படத்துடன், லிங்க் ஒன்றை பதிவிட்ட மர்ம கும்பல் ரூ.500 மந்திர நோட்டை கிளிக் செய்தால் ரூ.5000 பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்ட வினோத்தும் அதனை திறந்து இருக்கிறார். 

சில நொடிகளில் அவருக்கு ரூ.5000 வந்துள்ளது என குறுஞ்செய்தியும் பெறப்பட்ட நிலையில், வாங்கிக்கணக்கை சோதனை செய்தபோது ரூ.4650 பணம் எடுக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, பணத்தை இழந்த வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைனில் புதுவகை மோசடி; பாசத்தை பணயமாக வைத்து இலட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. மக்களே உஷார்.!