மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அபார்ட்மெண்ட் வீட்டில் அஜால் குஜால் தொழில்.. 3 பேர் கைது., 3 வெளிமாநில அழகிகள் மீட்பு..! சென்னையில் அதிரடி.!
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்திய கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது.
சென்னை கொரட்டூரில் விபசாரம் நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மல்லிகா, உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமை காவலர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அதிகாரிகள் அங்குள்ள 30வது தெரு மத்திய அவென்யூவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய சோதனையில், பெண்களை வைத்து விபச்சாரம் நடந்தது அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஷீஜா (வயது 42) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதேபோல், அம்பத்தூர் அபிராமிபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐதராபாத், பெங்களூரை சேர்ந்த 3 இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய ரமேஷ் (வயது 42), தினேஷ் குமார் (வயது 22) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.