திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காத்து வாக்குல 2 காதல்.. உண்மையாக காதலித்த கல்லூரி மாணவி விபரீத முடிவு.. பெற்றோர்கள் போர்க்கொடி.!
காதலித்து ஏமாற்றத்தை சந்தித்த கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்கொலைக்கு காரணமான இளைஞர் கைது செய்யப்படவேண்டும் என பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியை சார்ந்தவர் விஜயகுமார் (வயது 47). இவர் நர்சரி கார்டன் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் வித்யா (வயது 17). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ முதல் வருடம் பயின்று வந்துள்ளார். வித்யா, தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிய நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்க்கையில், மகள் அறையில் உள்தாழ்ப்பாள் போட்டு இருந்துள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காத காரணத்தால், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்போது, மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த விஷயம் குறித்து டி.பி சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.
இறந்துபோன மாணவி வித்யாவின் செல்போனை பெற்றோர்கள் ஆய்வு செய்கையில், கல்லூரியில் வித்யாவுடன் பயின்று வந்த ஸ்ரீராம் (வயது 18) என்பவருடன் மாணவி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து வித்யாவின் தோழிகளிடம் விசாரணை செய்கையில், வித்யாவும் - ஸ்ரீராமும் காதலித்து வந்தது அம்பலமானது.
இந்த நிலையில், ஸ்ரீராம் மாணவி வித்யாவை பிரிந்து மற்றொரு பெண்ணை காதலித்ததாக தெரியவரும் நிலையில், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வித்யாவுக்கு ஸ்ரீராம் அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனதுடைந்துபோன மாணவி, தற்கொலை செய்துள்ளார்.
மேலும், வித்யா தற்கொலை செய்வதற்கு முன்னதாக, "எனது மரணத்திற்கு ஸ்ரீராம் மட்டுமே காரணம்" என குறுந்தகவல் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தெரியவந்ததும் வித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், வித்யாவின் உடலை பெற மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவர் ஸ்ரீராமை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் இறங்கவே, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், மாணவி வித்யாவின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து, கீழ்பாக்கம் துணை ஆணையரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.