#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருட்டு கஞ்சா குடிக்கி துணிகர செயல்.. கத்தி முனையில் வீடுபுகுந்து கல்லூரி மாணவி பலாத்காரம்.. சென்னையில் பயங்கரம்.!
கல்லூரி மாணவியை கஞ்சா போதையில் பலாத்காரம் செய்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையில் உள்ள குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியில் 22 வயது கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கத்தியை வைத்து இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
தொடர்ந்து கஞ்சா போதையில் இருந்த காமுகன் இளம்பெண்ணை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அவரது அக்காவிடம் கூறிய நிலையில், அவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் தான் இதற்கு காரணம் என தெரிய வர, அவரை கைது செய்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், அவர்கள் விசாரணை நடத்திய நிலையில், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது தான் தனது நோக்கம் என்றும், அவ்வாறு சுற்றி திரிந்தபோது அங்கு ஒரு வீட்டை கண்டு ஏதாவது கிடைக்கும் என எண்ணி உள்ளே சென்றேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், கஞ்சா போதையில் இருந்ததால், இளம்பெண்ணை பார்த்தவுடன் மனம் மாறி பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், காமுகனின் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன் சமூக ஆர்வலர்கள் பலரும் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கது எனவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.