ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
தங்க பிரியர்களே.. ரூ.200 சரிந்தது தங்கத்தின் விலை.. இன்றே வாங்கி மகிழுங்கள்..!

உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டபோதும், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரமானது அதிக அளவில் இருந்தது. இந்தியாவில் விதிக்கப்படும் சுங்கவரி மற்றும் பிற வரிகள் காரணமாக இந்த விலை மாற்றமானது ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திற்கு சென்று 45,000-த்தை கடந்து சென்றுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் ரூ.5,620-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,960-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.