26 மாவட்டங்களில் வெளுத்துவாங்கும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



Chennai meotrological centre heavy rain alert

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 26 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "20ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், கரூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

chennai

தலைநகர் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்து 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 - 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வேப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 20-ஆம் தேதியான இன்று தெற்கு இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.