ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
கம்பளைண்ட் கொடுத்த பெண்ணுக்கு மெசேஜில் சேட்டை செய்த காவலர் பணியிடைநீக்கம்..!

புகார் அளிக்கச்சென்ற பெண்ணின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிய காவலரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள செம்பியம் பகுதியை சேர்ந்த பெண்மணி, நிலம் தொடர்பான பிரச்சனைக்காக செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், வினோத் குமார் என்ற காவலர், பெண்மணியின் செல்போன் நம்பரை வாங்கி சேட்டிங் செய்து பேசி வந்துள்ளார். கடந்த 22ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தனது வீட்டிற்கு வருமாறு பெண்மணி அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு ஆசையோடு சென்ற காவலர் வினோத் குமாருக்கு பெரும் அதிர்ச்சியாக பெண்ணின் கணவர் இருந்துள்ளார். நிலைமையை உணர்ந்துகொண்ட வினோத், பெண்ணின் கணவருடன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியில் பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், துறை ரீதியான விசாரணை நடந்து காவலர் வினோத் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.