தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவும், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 6ம் தேதியான இன்று முதல் 8ம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர மாவட்டங்களில் வறண்ட வானிலே நிலவும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 9ம் தேதி மற்றும் 10ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசம் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதி, வடகிழக்கு - கிழக்கு திசையிலிருந்து பலத்த காற்று 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகம் வரை வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.