#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் மாயம்; கண்ணீருடன் பரிதவிக்கும் பெற்றோர்..!
சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாகூர் மீரான். இவரின் மகன் சாதிக் (வயது 14).
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெற்றோர், எதிர்வரும் தேர்தலில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என மகனை அறிவுறுத்தி இருக்கின்றனர். மேலும், நன்கு படிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் பெற்றோர் தன்னை படிக்க வற்புறுத்துவதாக எண்ணிய சாதிக், வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். மகனை காணாது பரிதவித்த பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர். மேலும், சிறுவனின் பெற்றோர் கண்ணீருடன் மகன் வீட்டிற்கு வரவேண்டி கோரிக்கை வைத்து போஸ்டர் அடித்து வருகின்றனர்.
மேற்கூறிய புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தொடர்பான விபரம் அறிந்தால், 8680952979 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.