மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் ஜோடிகள் டார்கெட்... காவல் அதிகாரி என கூறி கயவன் பார்த்த பலே வேலை.. காதல் ஜோடியாக நடித்து தூக்கிய போலீஸ்.!
சென்னையில் உள்ள பூந்தமல்லி, நசரத்பேட்டை வண்டலூர் - மீஞ்சூர் சாலையில், கடந்த 16-ம் தேதி இரவில் இளம்ஜோடி காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர் தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகம் செய்து, சி.சி.டி.வி கேமிரா மூலமாக தங்களை அதிகாரிகள் கண்காணிப்பதால் விசாரணை நடந்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக மிரட்டல் தோணியில் பேசிய நபர், ஜோடியின் செல்போன், 4 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைப்போல, கடந்த 17-ம் தேதி வெள்ளவேடு பகுதியில் இளம் ஜோடியிடம் 6 சவரன் நகைகள் இதே பாணியில் பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்துகையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கொள்ளையன் சிவராமன் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. இவனை கைது செய்ய காவல் துறையினர் இளம் தம்பதி போல மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள், வெள்ளவேடு சுங்கச்சாவடி பகுதியில் தயாராக இருந்துள்ளனர். அங்கு வந்த கொள்ளையன் காவல் அதிகாரிகளை இளம் ஜோடி என நினைத்து பேச்சு கொடுத்துள்ளான்.
இதனையடுத்து, காவல் துறையினர் தங்களின் உண்மை முகத்தை அம்பலப்படுத்த, கத்தியை காண்பித்து சிவராமன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற நிலையில், மதுரவாயல் சுனசேவடியில் வைத்து மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டான்.அவனிடம் இருந்து 10 சவரன் தங்க நகைகள் பறிமுதல் சீய்ய்ப்பட்டது. அவன் மீது பல்வேறு காவல் நிலையத்தில் 45 கொள்ளை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.