மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரபரப்பு சம்பவம்... வெந்நீரில் விழுந்த குழந்தை...5 நாட்களுக்கு பின்பு நடந்த துயர சம்பவம்..!
ஊத்துக்கோட்டை பகுதியில் குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரில் குழந்தை மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரசாக் - ஜெரினா தம்பதியினர். இவர்களுக்கு அஜ்மீர் என்ற 2 வயது குழந்தை உள்ளது.
ரசாக் கூலி வேலை செய்து வருகிறார். இதனால் சம்பவம் நடந்த அன்று அவர் வேலைக்கு வெளியில் சென்று விட்டார். இந்த நிலையில் ஜெரினா தனது மகன் அஜ்மீரை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார்.
பின்பு வெந்நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு சோப்பு மற்றும் துண்டை எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்று உள்ளார் ஜெரினா. ஆனால் வெண்ணீர் இருந்து பாத்திரம் அருகே குழந்தை அஜ்மீர் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென்று குழந்தை வெந்நீர் இருந்த பாத்திரத்திற்குள் தவறி விழுந்துள்ளது. உடனே குழந்தை அஜ்மீரின் அலறல் சத்தம் கேட்கவே ஓடி வந்த தாய் குழந்தையை வெந்நீரில் இருந்து தூக்கி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த குழந்தை அஜ்மீர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பின்பு அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை அஜ்மீர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிர் இழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.