#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஸ்வரூபமெடுத்த பொள்ளாச்சி விவகாரம்! பாதிக்கப்பட்டவர்களுக்காக சிபிசிஐடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் என குரல் எழுப்பி வந்தனர்.
அதனை தொடர்ந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் தகவலும் ரகசியமாக காக்கப்படாமல் போலீசாரால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களின் குடும்பத்திற்கு மிரட்டல் விடப்பட்டது. இந்நிலையில் இதனால் அச்சம் கொண்டு பெண்கள் யாரும் இதுகுறித்து புகார் அளிக்க முன்வரவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என சிபிசிஐடி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் கண்டிப்பாக ரகசியமாக காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.