"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
விடியற்காலையில் கிணற்றின் உள்ளேயிருந்து வந்த முனகல் சத்தம்! நைசாக எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மூலசெங்காடு பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா. இவர் நெல் அறுவடை வாகன டிரைவராக உள்ளார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு தன்சிகா என்ற மூன்றுவயது மகளும், ஹன்சிகா என்ற ஒருவயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இளையராஜாவின் தாயார் கலைச்செல்வி தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது கிணற்றில் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அவர் கிணற்றுக்குள் எட்டிபார்த்தபோது மருமகள் திவ்யா குழந்தைகளுடன் கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்துக்கொண்டு தனது மகன் இளையராஜா மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு விரைந்த அவர்கள் கிணற்றிலிருந்து திவ்யா மற்றும் குழந்தை வன்ஷிகாவை மீட்டனர்.
அதனை தொடர்ந்து இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குழந்தை வன்ஷிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.மேலும் முதுகெலும்பு உடைந்த நிலையில் திவ்யா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் குழந்தை தன்ஷிகாவும் உயிரிழந்தநிலையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குழந்தை வன்சிகாவை திவ்யா திட்டி அடித்துள்ளார். அதனால் கலைச்செல்வி மருமகள் திவ்யாவை திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த திவ்யா இத்தகைய விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.