மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவருக்கு வேறொரு திருமணம் செய்து வைங்கள் - கடிதம் எழுதி மனைவி தற்கொலை..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், இந்திரா நகரில் வசித்து வருபவர் சரவணன். இவரின் மனைவி பிரேமலதா (வயது 31). அங்குள்ள தனியார் டியூசன் சென்டரில் ஆசிரியையாக படித்து வருகிறார். தம்பதிக்கு காவியா என்ற 10 வயது மகளும், கோதர்ஷன் என்ற 6 வயது மகனும் இருக்கின்றனர்.
இதற்கிடையில், நேற்று மாலை நேரத்தில் பிரேமலதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வேடசந்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிரேமலதா கைப்பட எழுதி வைக்கப்பட்டு இருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது.
கடிதத்தில், "எனக்கு வாழ பிடிக்கவில்லை. மகள், மகனை அக்காவிடம் ஒப்படைத்துவிடுங்கள், கணவர் மிகவும் நல்லவர். அவருக்கு வேறொரு திருமணம் செய்துவையுங்கள், கணவர் மற்றும் மகன், மகளை உறவினர்கள் அன்புடன் பார்த்துக்கொள்ளுங்கள்" என எழுதியுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.