தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
2024ல் சிவப்பு கருப்பா? காவியா? பார்த்திடலாமா?.. தனித்தமிழ்நாடு கேட்டு அன்றே., திமுக ஆ. ராசா அறைகூவல்..!
தமிழ் என்பது எங்களின் அடையாளம். இந்தி திணிப்பை எதிர்த்து 1937ம் ஆண்டிலேயே தனித்தமிழ்நாடு கேட்கப்பட்டது என பரபரப்பாக ஆ. ராசா பேசினார்.
திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசுகையில், "என் தலைவர் மு.க ஸ்டாலினை பார்த்தால் மோடிக்கு பயம். என் தலைவர் காரில் வேட்டி சட்டையுடன் செல்வதால் அதனை பார்த்து உங்களுக்கு பயம். கருப்பு சிகப்பு நிறத்தை பார்த்தால் உங்களுக்கு பயம்.
2024 ல் கருப்பு சிகப்பா? காவியா? என பார்த்துவிடலாமா?. பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவர்களில் நமது தலைவர் மு.க ஸ்டாலின் முக்கியமானவராக இருக்கிறார். அதனை டெல்லியிலே பல தலைவர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இந்தி எதிர்ப்பு மொழிக்காக மட்டுமா என்றால் இல்லை.
இரண்டு பண்பாடுகள். உங்களின் பண்பாடுகளை எங்களுக்கு திணிக்க வேண்டாம். எங்களுக்கு என அடையாளம் உள்ளது. பேசும் மொழிக்கு அடையாளம் இல்லை. எங்களின் மொழிக்கு அடையாளம் உள்ளது. மொழிவழி இனங்களில் மூத்த இனம் தமிழினம். இந்தியா அனைத்து கலாச்சாரம் இணைந்த ஒன்றியம்.
ஒரேமொழி என்று கூறினால் இந்தியா இருக்காது. 1937ல் 85 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியை எங்களின் மீது திணித்தால் தனித்தமிழ்நாடு கேட்போம் என நாவலர் சோமசுந்தர பாரதியார், ராசுப்பிள்ளை போன்றோர் கேட்டார்கள். அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், பக்திமான்கள். அவர்களின் மீது கேஸ் போடுங்கள். என் மீது கேஸ் போட வேண்டாம்" என்று பேசினார்.