"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"இந்தியாவுக்கே இனி விடியல்" - மக்களின் வலியை தேர்தல் அறிக்கையாக செதுக்கிய கனிமொழி; குவியும் பாராட்டுக்கள்.!
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கருத்துக்கேற்ப, மக்களின் குறைகளை கேட்டறிந்து திமுக தேர்தல் அறிக்கையை சிற்பியாய் செதுக்கிய திமுக துணைப்பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
2024 மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதில் இருந்து மட்டுமல்லாது, தமிழ்நாடு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து வந்த திமுக மக்களவை உறுப்பினர்கள் 'நாளை நமதே, நாற்பதும் நமதே' என்ற ஒற்றைச்சொல்லை முன்வைத்து தீவிர பிரச்சாரத்துடன் மக்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக 40 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் ஜூன் 04ம் தேதி வெளியாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மாற்றத்திற்காக ஏங்கித்தவித்த மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தாற்போல, 2024 மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் தங்களுக்கான ஜனநாயக வாக்குரிமையை முன்னெப்போதும் இல்லாத அளவு செலுத்தவும் தயாராக இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 2024 மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழர் தனித்து களம்காண்கிறது, நடிகர் விஜயின் தமிழக மக்கள் வெற்றிக்கழகம் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு அரசியல் ரீதியான அழுத்தம் அதிகரித்துள்ள இத்தேர்தல் களத்தில், மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலித்து வந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான பணிகளை தொடங்கினர். திமுக நேரடியாக 21 தொகுதியில் களமிறங்கிறது. அனைவர்க்கும் எல்லாம் என்ற கழக கொள்கையை முன்னிறுத்தி, இந்திய அளவில் ஏற்பட்டுள்ள மக்களின் ஏக்கத்தை நிவர்த்தி செய்ய அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10 தொகுதிகள், வி.சி.க., சி.பி.ஐ.., சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, கொ.ம.தே.க., இ.யூ.மு.லீ ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என 40 தொகுதிகளையும் பகிர்ந்து வழங்கியது.
இத்தேர்தலுக்கான விருப்பமனுக்களை திமுக தனது கட்சி பிரதிநிதிகளுக்கு தலைமை அலுவலகத்தில் வழங்கியது. இதற்கான நிர்வாக குழுவில் திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுச்செயலாளர் & தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, அமைச்சர் கே.என் நேரு ஆகியோர் குழு திறம்பட கவனித்துக்கொண்டது. ஒருபக்கம் வேட்பாளர்கள் தேர்வு, மறுபக்கம் திமுகவின் சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் பிரத்தியேக குழு உருவாக்கப்பட்டு, மக்களுக்கான வாக்குறுதி மற்றும் அவர்களின் தேவை குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவற்றில், மக்களால் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் கவனிக்கப்பட்ட விஷயமாக பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு விலை குறைப்பு, மாநில வளர்ச்சியில் அரசியல் ரீதியான முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் ஆளுநரின் அதிகார வரம்பு குறைவு, புதுச்சேரிக்கு மாநில உரிமை, தமிழகத்திற்கு வந்த இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தலைவிகளுக்குக்கும் மாத உரிமைத்தொகை ரூ.1000, மகளிர் சுய உதவிக்களுக்கு 10 லட்சம் வரையில் வட்டியில்லா கடன், சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றம், வங்கிகளில் விதிக்கப்படும் அபராதம் ரத்து, குடியுரிமை சட்டத்திருத்தம் ரத்து, கல்விக்கடன் தள்ளுபடி ஆகியவை இருந்தன.
திமுக தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீடு விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், திறம்பட செயல்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். திமுக மூத்த தலைவர்கள் பலரும் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளையும் கூறி இருந்தனர். மக்களிடம் இருந்து கேட்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையால், மக்களும் கனிமொழியை மனம்நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். இன்றைய நிலமையில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளான பெட்ரோல் டீசலில் தொடங்கி கடன்கள் வரை பல்வேறு திட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க பயன்படும் என்பதால், இத்தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கு பாராட்டுக்கள் வெகுவாக குவிந்து வருகிறது.
கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, தொடர்ந்து பல நாட்கள் மாவட்ட வாரியாக சிறப்பு பயணங்களை அடுத்தடுத்து மேற்கொண்டு, அலுவல் கூட்டங்கள் நடத்தி, ஆன்லைன் வாயிலாகவும், தபால் வாயிலாகவும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அதில் கிடைக்கப்பெற்ற தகவல் மற்றும் வேண்டுகோளை உறுதி செய்து தேர்தல் அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்!