மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனுகொடுக்க வந்த திமுக தொண்டரை லாக் செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள்; ரைடில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.!
திமுக அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலாகவே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, பொன்முடியின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையால் திமுக வட்டாரங்கள் அதிர்ச்சியில் இருக்கின்றன. கண்டன குரலும் எழுப்பப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் திமுக தொண்டர் காலை 8 மணிக்கு மனுகொடுக்க வேண்டி வீட்டில் காத்திருந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென வந்து சோதனையை தொடங்கியுள்ளனர்.
தான் மனுகொடுக்க வந்ததாகவும் கூறி அவரை வெளியே விடாத நிலையில், செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு அங்கேயே அமர வைத்துள்ளனர்.
பின் 4 மணிநேரம் விசாரணை நடந்து, அவர் உண்மையில் மனுகொடுக்க வந்துள்ளார் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.