#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிபோதையில் மனைவியை தாக்கிய கணவர்.. தட்டி கேட்க வந்த மச்சான்.. கொலையில் முடிந்த விபரீதம்..!
குன்றத்தூர் அருகே குடிபோதையில் அக்காவை அடித்த மாமாவை கொலை செய்த மச்சானை காவல்துறையினர் கைது செய்தனர்.
பூந்தமல்லி, குன்றத்தூர் அருகில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (45). சென்ட்ரிங் வேலை செய்பவர். இவரது மனைவி தேவி (38). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஒரு கொலை வழக்கு மற்றும் செல்போன் பறிப்பு போன்ற வழக்குகள் வெங்கடேசன் மீது உள்ளதாக கூறப்படுகிறது. மனைவியை விட்டு பிரிந்து சென்ற வெங்கடேசன் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மனைவியின் வீட்டிற்கு வெங்கடேசன் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் மனைவியை அடித்து, உதைத்து பணம் கேட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் மனைவியிடம் வெங்கடேசன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவியின் தம்பி சதீஷ்குமார் (40) வெங்கடேசனுடன் சன்டை போட்டதில், சதீஷ்குமாருக்கும் வெங்கடேசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சதீஷ்குமார் தாக்கியதில் வெங்கடேசன், மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.