தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கட்டாயம் இதை வழங்க வேண்டும்.. தேர்தல் கமிஷன்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோயால் தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளது. எனவே தேர்தல் சமயத்தில் இந்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில் 1. வாக்குப்பதிவு நடைபெறும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பொத்தானை பலரும் அழுத்த வேண்டியிருப்பதால், வாக்காளர்கள் அனைவருக்கும் கட்டாயம் கையுறைகள் வழங்கப்படும். இது பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்த உகந்தவையாக இருக்கும்.
2.தேர்தலுக்கு முந்தையநாளே வாக்குச்சாவடிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்துவது கட்டாயம்.
3. வாக்குச்சாவடி நுழைவாயிலில் வெப்பம் பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் கருவி வைக்கப்படும். தேர்தல் அல்லது துணை சுகாதார பணியாளர்கள் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பார்கள்.
4. 1,500 வாக்காளர்களுக்கு பதிலாக 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
5.தேர்தலில் கொரோனா நோயாளிகளும் வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு நாளின் கடைசி மணி நேரம் இந்த நோயாளிகள் ஓட்டுப்போடுவதற்காக ஒதுக்கப்படும்.