மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுப்பேருந்து நடத்தினரின் அலட்சியம்; மூதாட்டியின் கால்களில் ஏறி இறங்கிய சக்கரம்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்த மூதாட்டி, தான் பயணிக்க வேண்டிய அரசு பேருந்தை தவிர்த்து, வேறொரு பேருந்தில் மாற்றி ஏறியுள்ளார்.
இதனால் பேருந்தின் நடத்துனர் மூதாட்டியை இறக்கிவிட நடுவழியில் நடவடிக்கை எடுக்க, மூதாட்டி இறங்குவதற்குள் பேருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் கால்களை பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த மூதாட்டி உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி விபத்து நடந்தது என விசாரிக்கப்படுகிறது.