கிடாவெட்டில் ஆட்டு ரத்தத்துடன் வாழைப்பழம் சாப்பிட்ட பூசாரி பலி; உடலை வருத்தி தொடர் பணியால் சோகம்.!



Erode Gobi Priest Died

 

ஈரோடு மாவட்டம் கோபி, நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 56). இவர் கொப்பலூர் செட்டியாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணமார் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக உடல்நிலை குன்றிய பழனிச்சாமி, ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். தொடர்ந்து கோவில் திருவிழாவை தொடர்ந்து, அவர் அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: தோட்டத்தில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த சோகம்; மின்சாரம் தாக்கி பரிதாப பலி.!

கோவில் திருவிழாவுக்கு தொடர் உழைப்பு

இந்நிலையில், நேற்று திடீரென கோவில் வளாகத்தில் மயங்கிய பழனிசாமியை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாந்தி, மயக்கம் பலி

முதற்கட்ட விசாரணையில், கோவில் திருவிழாவில் ஆடு வெட்டப்பட்டு, அதன் இரத்தத்தை வாழைப்பழத்துடன் சேர்த்து பூசாரி உட்பட 5 பேர் சாப்பிட்டு இருக்கின்றனர். இதனால் இவர்கள் அனைவரும் சில நிமிடங்களில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டதும் உறுதியானது.

மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து; இளைஞர் பரிதாப பலி.!