நொடியில் மறைந்த புன்னகை.. மிதிவண்டி ஓட்டிய சிறுவன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலி.!



erode-kodumudi-child-boy-died-accident

கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டர் சக்கரம் சிறுவனின் மீது ஏறி இறங்கியதில், 10 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சோகம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, வெங்கமேடு பகுதியில் வசித்து வருபவர் பொன் கதிரேசன். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி உமா மகேஸ்வரி. வெள்ளகோவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

தம்பதிகளுக்கு பொன் வெற்றி தமிழ் (வயது 10), பொன் ஆவின் தமிழ் (வயது 6) என 2 மகன்கள் உள்ளனர். பொன் வெற்றி தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும், பொன் கவின் ஒன்றாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பொன்வெற்றி வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

பின்னர், வெங்கமேடு - நாகம நாயக்கன்பாளையம் கிராம சாலையில் மிதிவண்டியை ஓட்டியுள்ளார். அப்போது, அவ்வழியே சங்கர் என்பவர் டிராக்டரில் கரும்பு லோடு ஏற்றிச்சென்றபோது, எதிர்பாராத விதமாக டிராக்டர் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில், நிலைதடுமாறி விழுந்த பொன்வெற்றி தமிழ் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. 

இதில், சம்பவ இடத்திலேயே பொன்வெற்றி உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினார். தகவல் அறிந்து சென்ற கொடுமுடி காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சங்கருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.