திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவன் - மனைவி சண்டையில், கர்ப்பிணி பெண் விபரீதம்.. கண்ணீரில் கணவன்., குடும்பத்தினர். !
வடமாநில கர்ப்பிணி பெண்மணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தருணாரூரா பகுதியில் வசித்து வந்தவர் அனீஸ் வர்மா. இவர் கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, கரூர் தேசிய நெடுஞ்சாலை நத்தமேடு பகுதியில் குடிபெயர்ந்துள்ளார். இவர் தனது மாமா நந்து வர்மா, அவரின் தம்பி தீபக் வர்மா மற்றும் அத்தை மகன் அஜய் வர்மா ஆகியோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து பானி பூரி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், அனீஸ் வர்மாவின் சகோதரி திகிசா வர்மாவுக்கு, நந்துவர்மாவுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தை தொடர்ந்து திகிஷா வர்மாவும் ஈரோட்டுக்கு வந்துவிட்ட நிலையில், அவரின் கணவருடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தற்போது அவர் கர்ப்பிணியாக இருக்கிறார். கணவன் - மனைவி இடையே அவ்வப்போது குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று நந்து வர்மா பானிபூரி வியாபாரம் செய்ய புறப்பட்டு சென்றுவிட்ட நிலையில், வீட்டில் திகிசா வர்மா மட்டும் தனியே இருந்துள்ளார். வியாபாரத்திற்கு சென்ற நந்து, இரவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கர்ப்பிணி மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கொடுமுடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் திகிசா வர்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.