திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எடப்பாடி பழனிச்சாமி புதிய வாகனம் வாங்கியது ஏன்? - மௌனம் களைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.!
மதுரை மாநகராட்சியில் கழிவுநீர், குடிநீர், பாதாள சாக்கடை, சாலை அமைப்பு உட்பட அடிப்படை தேவையை நிறைவேற்றித் தர மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமாரிடம் அதிமுக உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மனு அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து நடந்து செய்தியாளர்கள் சந்திப்பில், "மாமன்னன் திரைப்படத்தை பார்க்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. மக்களை விரைந்து சென்று சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புதிய வாகனத்தை வாங்கி உள்ளார். அவர் வல்லவனுக்கும் வல்லவன்.
அதிமுக வெற்றி பாதையில் பயணித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அரசுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் போது தான் திமுகவின் கூட்டணியில் அவர்கள் இருக்கிறார்களா? என்பது தெரியவரும்.
தேர்தல் நேரத்தில் அதிமுகவின் கூட்டணி முடிவாகும். கூட்டணி விவகாரத்தில் மக்களின் நலம் கருதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார்" என்று தெரிவித்தார்.