மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சமையல் எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்து... கணவன் மனைவி படுகாயம்..!!
வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் செம்மபட்டியில் வசித்து வருபவர் பெரியசாமி (55). இவரது மனைவி பழனியம்மாள் (48). இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
பெரியசாமி வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் ஏற்கனவே கசிவு இருந்துள்ளது, இதை அறியாத பெரியசாமி கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். இதனால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கணவன், மனைவி இருவர் மீதும் தீ பிடித்தது. இதை பார்த்த அந்தப் பகுதிமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
காயமடைந்த கணவன் மனைவி இருவரையம் 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கணவர் பெரியசாமி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், பழனியம்மாள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லபட்டனர். இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.