மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே இதுதான் காரணமா? பேய் பிடித்ததுபோல நாடகமாடிய இளம்பெண்! திருநங்கையின் ஆட்டத்தால் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!
சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் திருநங்கை ஒருவர் பூசாரியாக உள்ளார். அவர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கிவருகிறார். இந்தநிலையில் சேலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பேய் பிடித்ததாக கூறி, அவரது பெற்றோர்கள் அவரை அந்த கோவிலுக்கு அழைத்துவந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த திருநங்கை இளம்பெண்ணுக்கு பேய் ஓட்ட துவங்கியுள்ளார். அப்போது அவர் பல அம்மன் பெயர்களை கூறி பேயை பெண்ணின் மேலிருந்து ஓடிவிடும்படி எச்சரிக்கை விடுத்தார்.
ஆனாலும் அந்த இளம்பெண் தொடர்ந்து பேய் பிடித்ததுபோலவே இருந்துள்ளார்.மேலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு இளம்பெண் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை தான் தயாராக வைத்திருந்த பிரம்பால் அந்த இளம்பெண்ணை அடித்துள்ளார். இதில் அந்த பெண் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். அதனை தடுக்க வந்த பெற்றோர்களையும் திருநங்கை அதட்டி அமரவைத்துள்ளார்.
இந்நிலையில் வலிதாங்க முடியாமல் இறுதியாக அந்த இளம்பெண், தான் ஒருவரை காதலிப்பதாகவும், அதனை மறைக்கவே பேய் பிடித்ததாக நடித்ததாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து திருநங்கை பூசாரி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து அந்த இளம்பெண் பொய் சொல்லமாட்டேன் என தன்னுடைய தந்தையை தாண்டி சத்தியம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.