பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை கைது!

சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் தொழில் ஈடுபடுத்திய பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஓஎம்ஆர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் தனது மகளை பள்ளி விடுமுறைக்கு அவரது தங்கை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அப்போது அங்கு மாணவியின் அத்தை மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். அதன்படி முதலில் இளைஞர் ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த இளைஞர் மாணவியை தனது வீட்டில் ஐந்து நாட்கள் வைத்திருந்த பாலியல் சித்திரவதை செய்துள்ளார். அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் இதே போல் ஒவ்வொரு நபர்களும் பணம் பெற்றுக் கொண்டு மாணவியை அனுப்பி வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தனது பெற்றோர் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற மாணவிக்கு திடீரென உடல் நலக்க்கோளாறு ஏற்பட்டதால், மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை மனைவியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது மாணவி அத்தையின் செயல்கள் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் அத்தை மற்றும் அதற்கு உடனடியாக இருந்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.