மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண் கடத்தி பலாத்காரம்.. போலீசார் வலைவீச்சு.!
தூத்துக்குடியில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணை கடத்தி பல தாரம் செய்த சம்பவத்தில் 2 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 25 இளம் பெண் ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு instagram மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து இருவரும் அடிக்கடி வெளியே சென்று சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தூத்துக்குடி பெருமாள் நகர் பகுதியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை குடியிருப்பு அருகே தனிமையில் சந்தித்துள்ளனர்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் இளம்பெண்ணின் காதலரை தாக்கி விட்டு, இளம் பெண்ணை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின்னர் ரயில்வே டிராக் பகுதி அருகே அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதன் பிறகு அந்தப் பெண் அங்கிருந்து வந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பணக்காரன் செய்த இரண்டு வாலிபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இளம் பெண்ணின் காதலனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.