தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை இலட்சத்தீவு, கேரள - கர்நாடக கடலோர பகுதி, அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகமாக முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.