#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புயலின் கோரத்தாண்டவம்.. மொட்டை மாடியில் கொட்டும் மழையில் 4 நாட்களாக மழை தண்ணீரை மட்டுமே குடித்து குழந்தைகளுடன் அவதியுற்ற தாய்..!
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைத்தளம் முழுவதும் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் அப்பகுதியில் வாழும் பெண் ஒருவர் தனது வீட்டின் தரைத்தளம் முழுவதும் நீரில் மூழ்கியதால் தனது இரண்டு மகள்களை கூட்டிக்கொண்டு 4 நாட்களாக மொட்டை மாடியில் தவித்து வந்துள்ளார்.
மேலும் கொட்டும் மழையில் மொட்டை மாடியில் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு உணவு கூட இல்லாமல் மழை தண்ணீரை பிடித்து குடித்து அச்சத்துடன் இருந்ததாக அந்தப் பெண் வேதனை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பகுதிகளில் உள்ள அநேக வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் இதனைக் கண்டு மிகுந்த அச்சம் அடைந்ததாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் நான்கு நாட்களுக்கு பிறகு மெல்ல மெல்ல வெள்ளம் வடிய தொடங்கியுள்ள நிலையில் விஷ பூச்சிகளும், பாம்புகளும் வீட்டுக்குள் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் மழைநீரால் சேதமடைந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சோபா போன்ற பொருட்களை பொதுமக்கள் வீட்டை விட்டு அகற்றி வருகின்றனர்.