வல்லான் திரைப்படத்துக்கு யுஏ சான்றிதழ்; தணிக்கைக்குழு அறிவிப்பு.!
அடக்கொடுமையே! மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய நபர்..ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.!
கேரள மாநிலம் மாவெளிகரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீ மகேஷ். இவருக்கு திருமணமாகி நட்சத்திரா என்று மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த ஸ்ரீ மகேஷ் மனைவி மற்றும் மகளை கொடூரமாக அரிவாளால் தாக்கியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த ஸ்ரீமகேசின் மனைவி மற்றும் மகளை அருகில் இருந்தவர்கள் இரத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி நட்சத்திர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஸ்ரீமகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீமகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்து சென்றனர். அப்போது சாஸ்தான்கோட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய ஸ்ரீமகேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்து தந்தையும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.