ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதலன் வரும் வரை காத்திருந்த கணவன்: மனைவியின் கண்முன்னே செய்த காரியத்தால் பதறிய மனைவி..!
மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள சொக்ககிழவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆண்டிக்காளை (40). இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நெவ்வாயி (35). சிங்கம்புணரி கோட்டை அருகேயுள்ள வேங்கைபட்டி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (39). இவருக்கும், நெவ்வாயிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆண்டிக்காளை இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கே வந்து நெவ்வாயியுடன் உல்லாசமாக இருப்பதை இளையராஜா வழக்கமாக கொண்டிருந்தார். இது குறித்து மனைவியை கண்டித்தும் அவர் கேட்காததால் கையும் களவுமாக அவர்களை பிடிக்க ஆண்டிக்காளை காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை ரகசியமாக இளையராஜா சந்தித்துள்ளார். இதற்காகவே காத்திருந்த ஆண்டிக்காளை, இளையராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்த எதிர்பாராத தாக்குதலில் படுகாயம் அடைந்த இளையராஜா அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று இளையராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆண்டிக்காளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.