மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த மூன்றே நாளில், அது இல்லை என்று மனைவி ஓட்டம்!. அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்!.
சேலம் மாவட்டத்தில் திருமணமான 3 நாட்களில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்லதுரை இவர் தீபா என்ற பெண்ணை கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து செல்லதுரை காதல் மனைவியுடன் அன்று இரவு தனது வீட்டில் தங்கினார்.
திருமணம் முடிந்த பின்னர், தனது கணவர் வீட்டில் கழிவறை இல்லை என்பதை தெரிந்துகொண்டார். கழிவறை இல்லாத வீட்டில் என்னால் வாழ இயலாது. நான் எனது அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என கூறிவிட்டு தனது கணவனை விட்டு பிரிந்துசென்றுவிட்டார்.
தீபாவை சமாதானம் செய்ய செல்லதுரை எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் செல்லத்துரையின் வீட்டில் வந்து வசிக்க முடியாது என கூறியுள்ளார்.
இதனால், மனமுடைந்த செல்லதுரை விரக்தியடைந்து தனது வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். செல்லத்துரையின் இறப்பால் அவரது குடும்பமே சோகத்தில் உள்ளது.