"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
வீட்டின் கிணற்றிலிருந்து வந்த அலறல் சத்தம்! ஓடிச்சென்று பார்த்த அக்கம்பக்கத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அன்பரசி. இவர்கள் இருவரும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் தனுஷ்காஸ்ரீ என்ற மகளும்,2 வயதில் மேகாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சரவணனின் வீட்டு பின்புறத்தில் இருந்த கிணற்றிலிருந்து அன்பரசி அலறும் சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றின் உள்ளே எட்டி பார்த்துள்ளனர். அங்கு அன்பரசியும், அவரது இரண்டாவது குழந்தை மேகனா ஸ்ரீயும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இறங்கி அன்பரசியை மட்டும் மீட்டனர். குழந்தையை மீட்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மேகனா ஸ்ரீயின் சடலத்தை மீட்டனர். அதனை தொடர்ந்து போலீசாரால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவர் கூறியதாவது, எனக்கு இரண்டுமே பெண் குழந்தைகளாக பிறந்ததால் எனது கணவர் மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் என்னை நாள்தோறும் அடித்து தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். மேலும் எனது கணவர் சரவணன் அவர் பணிபுரியும் கல்லூரியில் மற்றொரு பெண் ஒருவருடன் தகாத தொடர்பில் இருந்தார். இந்நிலையில் என்னை கொல்ல திட்டமிட்ட அவர் குடிபோதையில் குழந்தையோடு சேர்த்து என்னையும் கிணற்றில் தள்ளினார் என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.