திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!
தமிழகத்தில் வளிமண்டலத்தின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், தேனி, மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.